அனுமதியற்ற மனைப்பிரிவு / மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டம் 29.02.2024 வரை நீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 25, 2023

Comments:0

அனுமதியற்ற மனைப்பிரிவு / மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டம் 29.02.2024 வரை நீட்டிப்பு

அனுமதியற்ற மனைப்பிரிவு / மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டம் 29.02.2024 வரை நீட்டிப்பு!


24.11.2023

செய்தி வெளியீடு

அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 29.02.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து, 04.09.2023 அன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை எண்.118 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம்.

IMG_20231124_205529

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84629148