TNUSRB | 3,359 காவலர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு..
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும் இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுகான பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் பொதுப் பிரிவு ஆட்சேர்ப்பின் படி 2023 ஆம் ஆண்டுக்கான 3,359 பணியிடங்களை நிறப்புவதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் 08 ஆம் தேதி வெளியானது. அதனைத்தொடர்ந்து, இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான இணைய வழி ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 17 ஆம் தேதி நிறைவடைந்தது.
இப்பணியிடங்களுக்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது இப்பணியிடங்களுக்கான தேர்வு 10.12.2023 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பணிக்கான விவரங்கள் :
இரண்டாம் நிலைக் காவலர்- 780, இரண்டாம் நிலைக் காவலர்- 1,819, இரண்டாம் நிலை சிறைக் காவலர் - 86, தீயணைப்பாளர் - 674 என மொத்தம் 3,359 காலிப்பணியிடங்கள் இத்தேர்வின் மூலம் நிரப்பப்படவுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிகை அளிக்கப்படும்.
எழுத்து தேர்வில் தேர்ச்சியடையும் பட்சத்தில் உடல்திறன் தேர்வு மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் வெளியிடப்படும். தேர்வர்கள் https://www.tnusrb.tn.gov.in/ta/index-ta.php என்ற இணையத்தளத்தில் தேர்வு குறித்த இதர தகவல்கள் மற்றும் அட்மிட் கார்டு தகவல்கள் தெரிந்துகொள்ளலாம்.
Tags # TNUSRB
Search This Blog
Monday, October 30, 2023
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
84603407
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.