ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு
மாவட்ட தலைநகரில் நவம்பர் ஒன்றாம் தேதி ஆர்ப்பாட்டம் - ஜாக்டோ ஜியோ
அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ 4 கட்ட போராட்ட அறிவிப்பு
இதையும் படிக்க | ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO) முதல்வருக்கு கோரிக்கை - நாள்.30.10.2023 - 6 Pages - PDF கோரிக்கைகள்
தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும்.
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு திட்டம் காலவரையின்றி தள்ளிப்போடப்பட்டிருப்பதை ரத்து செய்து மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
(அ) இடைநிலைஆசிரியர்களுக்கும், முதுநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குனர் மற்றும் ஆசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதியை களையப்பட வேண்டும்.
(ஆ) மேலும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
- சத்துணவு, அங்கள்வாடி, ஊர்ப்புற நூலகர் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்களுக்கும் மற்றும் தொகுப்பூதியம், தினக்கூலியில் பணியாற்றிவரும் எம்.ஆர்.பி. செவிலியர்கள் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
- அரசு பணியாளர்கள் கண்காணிப்பாளர்கள் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் களப்பணியாளர்கள் பல்வேறு துறையில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான நிலுவையில் உள்ள பணி மேம்பாடு (CSA) உடனடியாக வழங்கிட வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணிக் காலத்தை பணிவரன்முறை செய்திட வேண்டும்.
2003 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும்.
அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் மட்டுமே பணியமர்த்த வேண்டும்.
21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
தனியார் மய அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்.
அரசுத் துறையில் அவுட்சோர்சிங் முறை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
* தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றித் தர வேண்டுமென ஜாக்டோ - ஜியோ சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
அடுத்த கட்ட போராட்ட அறிவிப்பு
நவம்பர் 15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ஆசிரியர் - அரசு ஊழியர் - அரசுப் பணியாளர் சந்திப்பு
போராட்ட பிரச்சார இயக்கம். நவம்பர் 25-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம்.
டிசம்பர் 28-ம் தேதி சென்னையில் லட்சக்கணக்கான தோழர்கள் பங்கேற்கும் கோட்டை முற்றுகை போராட்டம், CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் 0 முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை (DA) சரண்டர், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும்.
தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள். சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், MRS செவிலியர், வருவாய் கிராம உதவியாளர்கள் மற்றும் ஊர்புற நூலகர் O உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும்
7-வது ஊதியக் குழுவின் 21 மாத நிலுவைத் தொைைகயை வழங்கிட வேண்டும்.
இதையும் படிக்க | ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO) முதல்வருக்கு கோரிக்கை - நாள்.30.10.2023 - 6 Pages - PDF
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.