காலை உணவு திட்டம் : நேரில் வந்து ஆய்வு செய்த தெலங்கானா மாநில அதிகாரிகள் குழு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 31, 2023

Comments:0

காலை உணவு திட்டம் : நேரில் வந்து ஆய்வு செய்த தெலங்கானா மாநில அதிகாரிகள் குழு!!

காலை உணவு திட்டம் : நேரில் வந்து ஆய்வு செய்த தெலங்கானா மாநில அதிகாரிகள் குழு!!

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை தெலங்கானா மாநில அதிகாரிகள் பார்வையிட்டனர். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார். தமிழகத்தில் அனைத்து தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை, கடந்த 25ம் தேதி நாகை மாவட்டம் திருக்குவளை பள்ளியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ள காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை அறிய தெலங்கானா மாநில அதிகாரிகள் தமிழகத்திற்கு வருகை புரிந்தனர். தெலங்கானா முதல்வரின் தனிச்செயலாளர் ஸ்மிதா சபர்வால் தலைமையில் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட அதிகாரிகள் சென்னை ராயபுரத்தில் உள்ள ஜிசிசி பழைய பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். ராயபுரத்தில் ஊழல் மாநகராட்சி உருது தொடக்கப் பள்ளிக்கு சென்று உணவு பரிமாறப்படுவதை பார்வையிட்டனர். சமைக்கப்படும் இடம், உணவு தயாரிக்கும் முறை, அதனை பள்ளிகளுக்கு கொண்டு சேர்க்கும் முறை பற்றி அதிகாரிகள் அறிந்து கொண்டனர். இதனிடையே தமிழகத்தில் 31,008 பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டத்தால் 18 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர் காலை உணவுத் திட்டம்: தெலங்கானா அதிகாரிகள் ஆய்வு!

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் குறித்து அறிந்துகொள்வதற்காக தெலங்கானா அதிகாரிகள் குழு சென்னை வந்துள்ளது.

சென்னை ராயபுரத்திலுள்ள அரசுப் பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ள காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்து அறிந்துகொண்டனர்.



தெலங்கானா முதல்வரின் செயலாளர் சுனிதா, அரசு செயலாளர் கிறிஸ்டீனா, சிறப்புப் பணி அலுவலர் பிரியங்கா வர்கீஸ், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர், உள்ளிட்ட அதிகாரிகள் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்ய தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தனர்.



சென்னை ராயபுரத்திலுள்ள உணவுக் கூடத்தில், காலை உணவு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது, என்னென்ன உணவுகள் தயாரிக்கப்படுகின்றன, எவ்வாறு பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது என்பதை கேட்டறிந்தனர்.



தமிழகத்தின் காலை உணவுத் திட்ட சிறப்பு அதிகாரியான இளம்பகவத், காலை உணவுத் திட்டம் குறித்து தெலங்கானா அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தார்.



அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை நேரில் பார்வையிட உள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews