தினமலர் பத்திரிக்கைக்கு ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் கண்டனம்
திராவிட கட்சியான நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் சில மாவட்டங்களில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.அதன் பிறகு ஆட்சிக்கு வந்த ஐயா காமராஜர் உணவு வழங்கினால் மாணவர்கள் பள்ளிக்கு கல்வி கற்க வருவார்கள் என்பதை உணர்ந்து தனது ஆட்சி காலத்தில் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.அதன் பிறகு ஆட்சிக்கு வந்த ஐயா கலைஞர்,ஐயா எம்ஜிஆர் மற்றும் அம்மா ஜெயலலிதா உள்ளிட்ட முன்னாள் முதல்வர்கள் அனைவரும் அத்திட்டத்தை மேம்படுத்தி ஏழை மாணவர்களின் பசியை போக்கி கல்வி கற்க வைத்தனர். அதன் நீட்சியாக அரசுப் பள்ளி மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட தற்போதைய முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டத்தின் மூலம் பல இலட்சம் ஏழை மாணவர்கள் சத்து நிறைந்த காலை உணவை அவரவர் பள்ளிகளில் சாப்பிட்டு வருகின்றனர்.
பசியோடு இருந்தால் ஆசிரியர்கள் சொல்லித் தருவது மாணவர்களின் கவனத்தில் ஏறாது என்பதை உணர்ந்தும்,மாணவர்களின் உடல் நலனை பேணும் விதமாகவும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் கொண்டு வந்த காலை உணவு திட்டத்தை கேவலப்படுத்தும் விதமாக செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதோடு நாளைய தினமலர் நாளிதழின் முதல் பக்கத்தில் தங்களது மன்னிப்பை தலைப்பு செய்தியாக வெளியிட வேண்டும்.
மேலும் சேலம் மற்றும் ஈரோடு தினமலர் ஆசிரியரை பணியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஷமத்தனமான,அறுவருக்கத்தக்க செய்தியை வெளியிட்ட தினமலர் பத்திரிக்கை மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
பழ.கௌதமன்,
மாநிலத் தலைவர்,
ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.