மாணவனை பிரம்பால் அடித்த ஆசிரியர் மீது சரமாரி தாக்குதல்: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 09, 2023

Comments:0

மாணவனை பிரம்பால் அடித்த ஆசிரியர் மீது சரமாரி தாக்குதல்: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

மாணவனை பிரம்பால் அடித்த ஆசிரியர் மீது சரமாரி தாக்குதல்: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே குருவராஜகண்டிகை கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில், தற்காலிக அறிவியல் ஆசிரியராக மாநெல்லுாரை சேர்ந்த மோகன்பாபு, 37, என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

பள்ளியில், பூவலம்பேடு பகுதியை சேர்ந்த மாணவர், ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம், வகுப்பறையில் மாணவர் துடுக்காக பேசியதில் கோபமடைந்த ஆசிரியர் மோகன்பாபு மாணவனை பிரம்பால் பலமாக அடித்துள்ளார். இதில் மாணவரின் கை, கால்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.

வீட்டிற்கு சென்ற மாணவர், நடந்தவற்றை தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

அவர்கள் மகனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

இப்பிரச்னையால் பள்ளியில் நேற்று காலை, மாணவரின் பெற்றோர் மற்றும் கிராமத்தினர் முற்றுகையிட்டனர்.

அங்கு ஆசிரியர் மோகனை சூழ்ந்து கொண்ட கிராமத்தினர். அவரை தாக்கி, சட்டையை கிழித்து, செருப்பால் அடித்தனர். மற்ற ஆசிரியர்கள், அவரை தனி அறைக்கு அழைத்து சென்றனர்.

தகவல் அறிந்து சென்ற கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். முற்றுகையிட்டவர்களிடம் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.

காயம் அடைந்த ஆசிரியர் மோகன், பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாவட்ட கல்வி அலுவலர் வயலட் மேரி இசபெல்லா, பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

IMG_20230809_202718

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84627945