தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில மையம் கண்டன அறிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 09, 2023

Comments:0

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில மையம் கண்டன அறிக்கை!





இதையும் படிக்க | ஆசிரியரை காலணி கொண்டு தாக்கியவர்களை உடனே கைது செய்ய ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு _மாநில மையம் கண்டன அறிக்கை

திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி ,குருவராயன் கண்டிகை அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் திரு.மோகன் அவர்களை பள்ளிக்குள் நுழைந்து கடுமையாக தாக்கிய பொதுமக்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஆசிரியர்களை பொதுமக்கள் தாக்கும் சம்பவம் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது.இது ஆசிரியர்களிடையே அச்ச உணர்வையும் பாதுகாப்பின்மையும் ஏற்படுத்துகிறது.

இதையும் படிக்க | அரசு பள்ளி ஆசிரியரை செருப்பால் அடித்த பெற்றோர் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் carpal punishment வழங்கக்கூடாது என்கிற அரசாணை இருக்கும் நிலையில் ஆசிரியர்களும் இது போன்ற நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும் என்று அவர்களை நலம் கருதி கேட்டுக்கொள்கிறேன்.

ஆசிரியர்கள் மாணவர்களின் இரண்டாம் பெற்றோர்கள். அவர்களை நல்வழிப்படுத்துவதற்காகவே ஆசிரியர்கள் அவர்களை கண்டிக்கிறார்கள் என்பதை அனைத்து பெற்றோரும் உணர்ந்து ,ஒரு ஆசிரியர் தவறு செய்தால் அவரை சட்டப்படி தண்டிக்க வேண்டுமே தவிர பொதுமக்கள் தாங்களே சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது..

இதையும் படிக்க | ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் வேண்டுகோள்

இதுபோல் இன்னொரு சம்பவம் நடக்காமல் இருக்க எச்சரிக்கை விடுக்கும் வகையில் தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ன தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்

Dr.P. பேட்ரிக் ரெய்மாண்ட்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews