ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும்.தமிழ்நாடு அரசுக்கு ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் வேண்டுகோள்
திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி ,குருவராயன் கண்டிகை அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் திரு.மோகன் அவர்களை பள்ளிக்குள் நுழைந்து கடுமையாக தாக்கிய பொதுமக்களை ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.அரசு அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இதையும் படிக்க | அரசு பள்ளி ஆசிரியரை செருப்பால் அடித்த பெற்றோர் ஆசிரியர்களை பொதுமக்கள் தாக்கும் சம்பவம் தொடர்ந்து ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது.இது ஆசிரியர் சமுதாயத்திற்கு பாதுகாப்பில்லை என்பதை உணர்த்துகிறது.ஒரு ஆசிரியர் தாக்கப்பட்டால் ஒட்டு மொத்த மாணவர் சமுதாயமும் தாக்கப்படுகிறது என்பதை அரசும்,பெற்றோரும்,பொதுமக்களும் உணர வேண்டும்.ஒரு மாணவன் தவறு செய்தால் அவனை கண்டிக்கும் உரிமையை ஒரு ஆசிரியருக்கு கொடுக்க வேண்டும்.ஆசிரியரும் இன்னொரு பெற்றோர் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.இதுபோன்ற சம்பவங்களால் தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்க பயப்படும் நிலை ஆசிரியர்களுக்கு ஏற்படும் ஆனால் மாணவர் சமுதாயம் சீரழிந்து விடும்.
ஒரு ஆசிரியர் தவறு செய்தால் அவரை சட்டப்படி தண்டிக்க வேண்டுமே தவிர பொதுமக்கள் தாங்களே சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
இதுபோல் இன்னொரு சம்பவம் நடக்காமல் இருக்க எச்சரிக்கை விடுக்கும் வகையில் தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழ.கௌதமன்
மாநில தலைவர்
ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.