முதுநிலை கலை, அறிவியல் படிப்புகள் ஆக. 14 விண்ணப்பப் பதிவு தொடக்கம் - செய்தி வெளியீடு எண் :1620 - நாள்: 11.08.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 13, 2023

Comments:0

முதுநிலை கலை, அறிவியல் படிப்புகள் ஆக. 14 விண்ணப்பப் பதிவு தொடக்கம் - செய்தி வெளியீடு எண் :1620 - நாள்: 11.08.2023

Post-Graduate-Arts-and-Science-Registration--Press-Release-No-1620--11.08.2023
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மாணாக்கர் சேர்க்கை - 2023 - 2024 முதுநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு

செய்தி வெளியீடு எண் :1620 - நாள்: 11.08.2023

Government Arts and Science Colleges - PG Courses 2023-24 - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - முதுநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு (Post Graduate Courses) மாணாக்கர் சேர்க்கை - 2023 - 2024

கல்லூரிக் கல்வி இயக்ககம், சென்னை 600 015 தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மாணாக்கர் சேர்க்கை - 2023 - 2024

முதுநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு (Post Graduate Courses)

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள முதுநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in and www.tngasa.org என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு விண்ணப்பிக்கும் ஐந்து கல்லூரிகளுக்கும் விண்ணப்பக் கட்டண விவரம்

விண்ணப்பக் கட்டணம் - ரூ. 58/- பதிவுக் கட்டணம் - ரூ2/-

SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை - பதிவுக் கட்டணம் - ரூ. 2/- மட்டும்

விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card/Credit Card/Net Banking/UPI poub இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் *The Director, Directorate of Collegiate Education, Chennai - 15" என்ற பெயரில் 14.08.2023 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.

மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள் மேற்குறித்த இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
IMG_20230811_213737
இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யத் துவங்கும் நாள் - 14.08.2023

இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் - 22.08.2023

தொடர்பு எண்கள்:93634 62070, 93634 62042. 93634 62007, 93634 62024

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84629172