நீட் தேர்விலிருந்து ஒருபோதும் விலக்கு அளிக்க முடியாது - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி!
நீட் தேர்வுக்கு எப்போதும் தடை கொடுக்க மாட்டேன் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களிடையே பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆளுநர் மாளிகையில் நீட் இளநிலை தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றிருந்த மாணவர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் பங்கேற்றனர்.
இந்நிலையில் மாணவர்களிடையே பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது சேலத்தை சேர்ந்த மாணவர் ஒருவரின் தந்தை, நீட் தேர்வுக்கு எப்போது தடை விதிக்கப்படும் என கேள்வி எழுப்பினார் இதற்கு பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, நீட் தேர்வுக்கு விலக்கு கேட்பது மாணவர்களின் போட்டி போடும் திறனை கேள்விக்குறி ஆக்கிவிடும். நீட் தேர்வுக்கு கோச்சிங் சென்டர் சென்று பயில வேண்டிய அவசியமில்லை. பள்ளிகளில் பாடம் நடத்தும் போதே நீட் தேர்வுக்கான பயிற்சி கொடுக்கலாம்.
நீட் தேர்வுக்கான விலக்கு அறிவுசார்ந்த மாணவர்களை மாற்றுத்திறனாளிகளாக மாற்றி விடும். எனவே நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட மாட்டேன். மேலும் கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவினை ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுப்பியுள்ளேன் என கூறியுள்ளார்.
நீட் தேர்வின் மீதான ஆளுநர் ஆர்.என்.ரவியின் வெளிப்படையான கருத்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.