பிளஸ் 1 துணைத் தேர்வு விடைத்தாள் நகல்
அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்த கல்வியாண்டு நடைபெற்ற பிளஸ் 1 துணைத் தேர்வர்கள் தங்கள் விடைத்தாள் நகலினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வர்கள் ஆக.,14ம் தேதி பிற்பகல் முதல் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணபிக்க விரும்பினால், இதே இணையதளத்திலிருந்து அதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:ஜூன்/ஜூலை 2023, மேல்நிலைத் துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு ஆக., 16ஆம் தேதி முதல் 18ம் தேதிக்குள் காலை 11 மணி முதல் மாலை 5.00 மணி வரை நேரில் சென்று உரிய கட்டணத்தை செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களில் (தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு) முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு சென்று தேர்வர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
மறுமதிப்பீடிற்கு கட்டணமாக ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.505/-. மறுகூட்டல்-II கான கட்டணம் உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305/-, மற்ற பாடங்கL ஒவ்வொன்றுக்கும் ரூ.205/-. இக்கட்டணங்களை உதவி இயக்குனர்/முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.