ஆதார் - பான் இணைக்காதோர் சந்திக்கும் 15 சிக்கல்கள். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 06, 2023

Comments:0

ஆதார் - பான் இணைக்காதோர் சந்திக்கும் 15 சிக்கல்கள்.

*ஆதார் - பான் இணைக்காதோர் சந்திக்கும் 15 சிக்கல்கள்..!*

ரூ.1,000 அபராதத்துடன் ஆதார் - பான் இணைப்பிற்கான காலக்கெடு கடந்த ஜூன் 30ம் தேதி முடிவடைந்து விட்டது.

இதுவரை இணைக்காதவர்களின் பான் கார்டு ஜூலை 1 முதல் செயலிழந்து விடுமென மத்திய நேரடி வரிகள் வாரியம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

செயலிழந்த பான் அட்டைதாரர்கள், கீழ்க்காணும் 15 வகையான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது.

*அவை என்னென்ன என்று அறிந்து கொள்வோம்.*

1.வங்கிகளில் புதிதாக கணக்கு துவங்க முடியாது.

2.கிரெடிட் ,டெபிட் கார்டு கேட்டு விண்ணப்பிக்க இயலாது.

3.புதிதாக டீமேட் கணக்கு துவங்க விண்ணப்பிக்க முடியாது.

4.ஹோட்டல் அல்லது உணவகங்களில் வழங்கப்படும் பில் தொகைக்கு, ரூ.50 ஆயிரத்திற்கு மேல் செலுத்த முடியாது.

5.ஒரே நேரத்தில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் போது ரூ.50 ஆயிரத்துக்கு மேல் செலுத்த முடியாது.

6.மியூச்சுவல் பண்ட்களில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் முதலீடு செய்ய இயலாது.

7.ரூ.50 ஆயிரத்திற்கு மேல் நிறுவனங்களின் பங்குகளை வாங்க முடியாது.

8.ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரிசர்வ் வங்கியின் பத்திரங்களை வாங்க முடியாது.

9.வங்கிகளில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் டெபாசிட் செய்ய முடியாது.

10. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் வங்கிகளுக்கு காசோலை அளிக்க முடியாது.
IMG_20230706_213157_454
11. ஒரு நிதியாண்டில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் காப்பீட்டு பிரீமியமாக செலுத்த முடியாது.

12. பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்களில் பங்குகள், பத்திரங்களை ஒரு

பரிவர்த்தனையில் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்திற்கு மேல் வாங்கவோ, விற்கவோ முடியாது.

13.செயலிழந்த பான் எண்ணுக்கு எதிராக ரீபண்டு கோர முடியாது.

14. செயலிழந்த பான் எண்ணை வங்கியில் இணைத்திருப்போருக்கு, அவர்களது வங்கி கணக்கில் வட்டி அளிக்கப்பட்ட மாட்டாது.

15.பான் எண் குறிப்பிடாமல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் போது அதிகபட்ச

டி.டி.எஸ் மற்றும் டி.சி.எஸ் வரி பிடித்தம் செய்யப்படும்.வாகனங்கள், ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட அசையா சொத்துக்கள் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வாங்கும் போதும், விற்கும் போதும் அதிக வரி விதிக்கப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84524225