நீட்' தேர்வு: 'கட்-ஆப்' உயர வாய்ப்பு
'நீட்' தேர்வில் கடந்தாண்டை ஒப்பிடுகையில் தேர்வு எழுதியோர், அதிக மதிப்பெண் பெற்றோர் விகிதம் உயர்ந்துள்ளதால், கட்-ஆப் மதிப்பெண்ணும் அதிகரிக்கும் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
'நீட்' தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது.
இதில், 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று, தமிழக மாணவர் பிரபஞ்சன், தேசியளவில் முதலிடம் பிடித்தார். தமிழக மாணவர்களின் மதிப்பெண் விகிதம், கடந்தாண்டை ஒப்பிடுகையில் இருமடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக, 720க்கு 650 மதிப்பெண்களுக்கு மேல், கடந்தாண்டு 199 மாணவர்களே பெற்ற நிலையில், தற்போது 386 பேர் இடம் பிடித்துள்ளனர்.
500 மதிப்பெண்ணுக்கு மேல், கடந்தாண்டு 4,470 பேர் பெற்ற நிலையில், நடப்பாண்டில் 6,401 பேர் பட்டியலில் உள்ளனர். இதனால், கட்-ஆப் மதிப்பெண்ணும் உயரும் என்பது, கல்வியாளர்களின் கணிப்பாக உள்ளது.
கடந்தாண்டு பொதுபிரிவினருக்கான கட்-ஆப் மதிப்பெண் 581 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இதேபோல், பி.சி., பிரிவினர்- 529, பி.சி.எம்- 504, எம்.பி.சி.,/ டி.என்.சி.,- 496, எஸ்.சி.,- 407, எஸ்.சி.ஏ- 355 மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு, 311 மதிப்பெண்கள் கட்-ஆப் ஆக இருந்தது.
ஆனால், கடந்தாண்டை விட, தற்போது ஒவ்வொரு பிரிவிலும், 10 முதல் 15 மதிப்பெண்கள் கூடுதலாக, கட்-ஆப் நிர்ணயிக்கப்படும்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.