செவிலியர் பட்டயப்படிப்பில் சேர்ந்து தொடர்ந்து 3 ஆண்டுகள் பயில ஆகும் கல்விகட்டணம், புத்தக கட்டணம், விடுதிக்கட்டணம், சீருடைக் கட்டணம் மற்றும் இதர கட்டண செலவினங்களை ஒரு மாணவியருக்கு ரூ.70,000 (ரூபாய் எழுபதாயிரம்) முழுவதையும் அரசே ஏற்கும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 20, 2023

Comments:0

செவிலியர் பட்டயப்படிப்பில் சேர்ந்து தொடர்ந்து 3 ஆண்டுகள் பயில ஆகும் கல்விகட்டணம், புத்தக கட்டணம், விடுதிக்கட்டணம், சீருடைக் கட்டணம் மற்றும் இதர கட்டண செலவினங்களை ஒரு மாணவியருக்கு ரூ.70,000 (ரூபாய் எழுபதாயிரம்) முழுவதையும் அரசே ஏற்கும்

70,000 (Rupees Seventy Thousand) per student will be borne by the Government for tuition fee, book fee, hostel fee, uniform fee and other fees for 3 consecutive years of course in Nursing.

பழங்குடியினர் நல இயக்குநரகம், சென்னை, அறிவிப்பு

அரசாணை (ப) எண்.128, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (பமே 1(2)) துறை, நாள்: 5.9.2020ன் படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்/மாநகராட்சி/நகராட்சி மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளில் கல்வி பயிலும் பழங்குடியின மாணவிகள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று 40 சதவீதம் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவியர்களின் மேல்படிப்பிற்காக இந்திய நர்சிங் கவுன்சில் மற்றும் செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையங்களில் செவிலியர் பட்டயப்படிப்பில் (Diploma in General Nursing and Midwifery Course) சேர்ந்து தொடர்ந்து 3 ஆண்டுகள் பயில ஆகும் கல்விகட்டணம், புத்தக கட்டணம்விடுதிக்கட்டணம், சீருடைக் கட்டணம் மற்றும் இதர கட்டண செலவினங்களை ஒரு மாணவியருக்கு ரூ.70,000 (ரூபாய் எழுபதாயிரம்) முழுவதையும் அரசே ஏற்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews