பள்ளி கல்வி வளர்ச்சி தொடர்பாக ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர் உரையாடல் - Minister's interaction with teachers' unions regarding school education development
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று சென்னையில் கலந்துரையாடினார்.
இதில் 75 சங்கப் பொறுப்பாளர்கள் பங்கேற்று பள்ளிக்கல்வி, தொடக்க கல்வி வளர்ச்சிக்கான கருத்துகள், சங்கங்களின் பிரச்னைகள் குறித்து தெரிவித்தனர். சென்னை கல்லூரி சாலையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு நேற்று நடந்தது.
இந்த நிகழ்வில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி, தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், தனியார் பள்ளிகளுக்கான இயக்குநர் நாகராஜ முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு சங்கங்களில் இருந்து வந்திருந்தவர்களை ஒவ்வொரு பணியின் வாரியாக பிரித்து தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் என்று சுமார் 75 சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துரையாடி அவர்களின் குறைகளையும், கருத்துகளையும் கேட்டறிந்தார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.