தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - Apply by 21.07.2023 for Typing, Shorthand and Accountancy Examination
தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களின் ஆன்லைன் பதிவுகளை 22.06.2023 முதல் 21.07.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது ஏற்படும் திருத்தங்களை 24.07.2023 முதல் 26.07.2023 வரை மேற்கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட தேதிக்கு பிறகு திருத்தம் மேற்கொள்வதற்கு இவ்வலுவலக இணையதளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில் அபராத தொகை செலுத்தப்பட வேண்டும்.
வணிகவியல் தேர்வுக்கு புதிய விண்ணப்ப கட்டணம் ரூ.30/- மற்றும் பதிவுக் கட்டணம் இளநிலை- ரூ.100/-, இடைநிலை- ரூ.120/-, முதுநிலை -ரூ.130/- மற்றும் உயர்வேகம்- ரூ.200/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தட்டச்சு (ஆங்கிலம் & தமிழ்) தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.
அதாவது அனைத்து ஜூனியர் கிரேடு பாடங்களுக்கும் ரூ. 100/-, சுருக்கெழுத்து இடைநிலை (ஆங்கிலம்) ரூ. 120/-, அனைத்து மூத்த தரப் பாடங்களுக்கும் ரூ. 130/- மற்றும் அனைத்து அதிவேக சோதனை ரூ. 200/- என தேர்வு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.*
CLICK HERE தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுக்கு விண்ணப்பிக்க
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.