வட்டாரக் கல்வி அலுவலர் பணி: முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 04, 2023

Comments:0

வட்டாரக் கல்வி அலுவலர் பணி: முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

IMG_20230504_220230
வட்டாரக் கல்வி அலுவலர் பணி: முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

சென்னை, மே 3: வட்டாரக் கல்வி அலுவலர் காலிப் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பும் வகையில் தற்காலிக முன்னுரிமைப் பட்டியலை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: வட்டாரக்கல்வி அலுவலர் பணியிடத்தைபதவி உயர்வு மூலம் நியமனம் செய்வதற்காக 1.1.2023 நில வரப்படி 31.12.2010-ஆம் தேதிக்கு முன்னர் நடு நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்தவர்கள் மற்றும் கடந்த ஆண்டு டிச.31-ஆம் தேதிக்குள் வட்டாரக்கல்வி அலுவலர் பதவிக்கு நிர் ணயிக்கப்பட்ட அனைத்து துறை தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று முழுத் தகுதி பெற்ற ஊராட்சி ஒன் றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு நடுநிலைப் பள் ளித் தலைமை ஆசிரியர்கள் தங்களது விவரங்களை உரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவ லர்களை (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப் பட்டது. இதையடுத்து இந்த விவரங்கள் தொகுக்கப் பட்டு 31.12.2010-ஆம் தேதிக்கு முன்னர் பணியில் சேர்ந்து பணிபுரியும் 344 நபர்களைக் கொண்ட தற் காலிக தகுதி வாய்ந்தோர் முன்னுரிமை பட்டியல் இந்தச் சுற்றறிக்கையுடன் இணைத்து வெளியிடப் படுகிறது.

இந்த தற்காலிக தகுதி வாய்ந்தோர் முன்னுரி மைப் பட்டியலில் திருத்தம், சேர்க்கை மற்றும் சேர்க்கை ஏதுமிருப்பின் உடனடியாகத் தெரிவிக் குமாறும் இவை ஏதும் இல்லையெனில் அதற்கு ரிய சான்றை மே 4-ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் தெரிவிக்குமாறும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
IMG_20230504_220223

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84608746