ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு - வெளியான முக்கிய அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 15, 2023

1 Comments

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு - வெளியான முக்கிய அறிவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு

கீழ்காணும் ஆண்டுகளில் 2012, 2013, 2017 & 2019 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்வு சான்றிதழ் இல்லாதவர்கள் தங்களது தேர்வு சான்றிதழ் நகலினை பெற eSevai மூலம் 160 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு. ஆசிரியர் தேர்வு வாரியம்,

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக் கட்டடம், டி.பி.ஐ. வளாகம், கல்லூரிச் சாலை. நுங்கம்பாக்கம், தருமபுரி 600006.

ந.க.எண் 006/F2/2022 - நாள் (05.2023

பொருள்

ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதி தேர்வு 2012, 2013, 2017 & 2019 ஆண்டிற்கான தாள்-1 & II ஆகியவற்றிக்கான மறபிரதி சான்றிதழ்களின் இணையதளத்தில் TNeGA வழியாக வழங்குதல் விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்துதல்- தகவல் தெரிவித்தல் சார்ந்து.

பார்வை

1. இவ்வலுவலக மின்னஞ்சல் நாள் 11.08.2022

2 இவ்வாரிய தலைவர் அவர்களின் EOffice கடித நாள் 09.09.22

3.EMIS நிறுவனம் மின்னஞ்சல் நாள் 11.05.2023

பார்வை 1ல் காணும் கடிதத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு 2012, 2013, 2017 மற்றும் 2019 ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1 & 11 சான்றிதழ்களின் மறுபிரதி இவ்வாரியம் வாயிலாக வழங்கப்பட்டுவருகிறது.

மேற்படி சான்றிதழ்கள் சார்ந்த தேர்வர்களுக்கு இணையதளத்தின் TNeGA வழியாக வழங்குவதற்கு இவ்வாரிய தலைவர் அவர்களின் அனுமதியிற்கிணங்க ஆசிரியர் தகுதித் தேர்வு 2012 2013 2017 மற்றும் 2019 ஆண்டிற்கான தாள் 1 & 11 ஆகியவற்றிக்கான மறுபிரதி சான்றிதழ்கள் இணையதளத்தின் வழியாக வழங்க இருப்பதால் முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பப்படும் மறுபிரதி கோரும் விண்ணப்பங்களை இனி வருங்காலங்களில் 15.05.2023 முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தாலாகிறது. மேற்படி மறுபிரதி சான்றிதழ்கள் பெறுவதற்கு eSevai மையத்தை அனுகும்படியும், விண்ணப்பதாரர்களிடம் மறுபிரதி கட்டணத் தொகை ரூ.100/- (ஆசிரியர் தேர்வு வாரிய வங்கி கணக்கு) மற்றும் e.Sevai நிறுவனத்திற்கான சேவைக் கட்டணத் தொகை ரூ.60/- சேர்த்து மொத்தத் தொகை ரூ.160/ யை e.Sevai மையத்தில் செலுத்தி மறுபிரதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளும் படி விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தும்படி சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1 comment:

  1. முகவரியில் நுங்கம்பாக்கம். தருமபுரி - 600006 என்று உள்ளது....நுங்கம்பாக்கம்,சென்னை.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews