தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் விபத்தில் மரணமடைந்தால் வழங்கப்படும் உதவித் தொகை ரூ.1,00,000/-லிருந்து ரூ.2,00,000/- ஆக உயர்த்தி ஆணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 17, 2023

Comments:0

தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் விபத்தில் மரணமடைந்தால் வழங்கப்படும் உதவித் தொகை ரூ.1,00,000/-லிருந்து ரூ.2,00,000/- ஆக உயர்த்தி ஆணை வெளியீடு

தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் விபத்தில் மரணமடைந்தால் வழங்கப்படும் உதவித் தொகை ரூ.1,00,000/-லிருந்து ரூ.2,00,000/- ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.

ஆணை:

மேலே படிக்கப்பட்ட தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளரின் கடிதங்களில், 25.05.2022 அன்று நடைபெற்ற 79வது வாரிய கூட்டத் தீர்மானம் இனம் 5-ன்படி, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர் விபத்தில் மரணமடைந்தால், வழங்கப்படும் விபத்து மரண உதவித் தொகையினை ரூ.1,00,000/-லிருந்து ரூ.2,00.000/- ஆக உயர்த்தி வழங்க ஆணை வெளியிடுமாறு கோரியுள்ளார்.

2. தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளரின் செயற்குறிப்பினை அரசு கவனமுடன் ஆய்வு செய்து, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் நல நிதி செலுத்தும் தொழிலாளர் விபத்தில் மரணமடைந்தால், தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் விபத்து மரண உதவித் தொகையினை ரூ.1,00,000/-லிருந்து ரூ.2.00.000/- ஆக உயர்த்தி வழங்கவும், இதனால் ஏற்படும் செலவினத்தை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய நல நிதியிலிருந்து மேற்கொள்ளவும், மேலும், இந்த உயர்த்தப்பட்ட உதவித் தொகையினை 01.04.2023 முதல் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் எனவும் ஆணையிடுகிறது.

IMG_20230317_170530
IMG_20230317_170546

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84644574