எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் தொடக்க விழா - பள்ளிக்கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 17, 2023

Comments:0

எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் தொடக்க விழா - பள்ளிக்கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு!

IMG_20230317_161026
எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் தொடக்க விழா - பள்ளிக்கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு!

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளிகள் இயங்க முடியாத சூழல் உருவானதால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை நிரப்புவதற்காக இல்லம் தேடிக் கல்வி உட்பட பல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு.

1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் 16 லட்சம் குழந்தைகளின் கற்றலை வலுப்படுத்த உருவான திட்டம் 'எண்ணும் எழுத்தும்'. இத்திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி 'எண்ணும் எழுத்தும் கொண்டாட்டத்தின்' தொடக்க விழா மார்ச் 17, 2023 அன்று மாலை 3 மணிக்கு ஆம்பூர் பெத்லஹேம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நிகழவிருக்கிறது.

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் விழாவைத் துவக்கி வைத்து உரையாற்றுகிறார். எண்ணும் எழுத்தும் வகுப்பறையில் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு வகுப்பெடுக்கும் நிகழ்வுக்குப் பின்னர், எண்ணும் எழுத்தும் கொண்ட்டாட்டப் பதாகையில் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெறும். நிகழ்வில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டப் பரப்புரை வாகனத்தை கொடியசைத்து மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைப்பார்.

நிகழ்வுக்கு தங்கள் நிறுவனத்தில் இருந்து செய்தியாளர்களை அனுப்பி செய்தி சேகரிக்குமாறு அன்போடு வேண்டுகிறோம்.

ஆணையர்

பள்ளிக் கல்வி
IMG_20230317_160418

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84635040