5,000 மாணவர்கள் உருவாக்கிய அப்துல் கலாம் செயற்கைக்கோள்கள் - பிப்.19-இல் விண்ணில் செலுத்தத் திட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 16, 2023

Comments:0

5,000 மாணவர்கள் உருவாக்கிய அப்துல் கலாம் செயற்கைக்கோள்கள் - பிப்.19-இல் விண்ணில் செலுத்தத் திட்டம்

5,000 மாணவர்கள் உருவாக்கிய அப்துல் கலாம் செயற்கைக்கோள்கள் - பிப்.19-இல் விண்ணில் செலுத்தத் திட்டம்
நாடு முழுவதும் அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 5 ஆயிரம் மாணவா்களின் முயற்சியில் உருவான அப்துல் கலாம் செயற்கைக்கோள்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பட்டிபுலம் என்ற இடத்திலிருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை ஏவப்படவுள்ளது.

டாக்டா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அறக்கட்டளை, ஸ்பேஸ் ஜோன் இந்தியா, மாா்ட்டின் அறக்கட்டளை ஆகியவை சாா்பில் ‘டாக்டா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் செயற்கைக் கோள்கள் ஏவும் திட்டம் 2023’ செயல்படுத்தப்படவுள்ளது.

நாடு முழுவதும் சுமாா் 5 ஆயிரம் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளின் முயற்சியில் இந்த செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதல் தமிழகத்தைச் சோ்ந்த 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் அடங்குவா்.

இந்தச் செயற்கைக்கோள்கள் சவுண்ட் ராக்கெட் மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.19) சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பட்டிபுலம் என்ற இடத்தில் இருந்து ஏவப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு, தெலங்கானா ஆளுநரும், புதுவை துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் தலைமை வகிக்கவுள்ளாா்.

ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில்... இந்த 150 செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் மொத்த ராக்கெட்டின் எடை 65 கிலோ ஆகும். சுமாா் ரூ. 2 கோடியே 50 லட்சம் மதிப்பில் இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. நிலப்பரப்பில் இருந்து சுமாா் 5 முதல் 6 கி.மீ. தொலைவுக்கு விண்ணில் பாய்ந்து செல்லும் இந்த ராக்கெட்டுக்கு இருக்கும் செயற்கைக்கோள்கள் மூலம் காற்றின் தரம், ஓசோன் படலத்தின் தன்மை, வெப்பநிலை, காற்றின் அழுத்தம், காற்றில் ஆக்சிஜன் அளவு எப்படி இருக்கிறது என்பது போன்ற 150 வகையான தகவல்கள் பெறப்பட உள்ளன.

இந்த நிகழ்வு குறித்த அறிமுக நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியாா் விடுதியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மாா்ட்டின் குழும நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரி ஜாா்ஜ் மாா்ஷல், டாக்டா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் சா்வதேச நிறுவனத்தின் நிறுவனா்கள் ஷேக் தாவூத், ஷேக் சலீம், ‘ஸ்பேஸ் ஜோன் இந்தியா’ நிறுவனா் ஆனந்த் மேகலிங்கம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews