பிளஸ் 2 அக மதிப்பீடு: மாா்ச் 2-க்குள் பட்டியல் சமா்ப்பிக்க உத்தரவு
பிளஸ் 2 பொதுத் தோ்வு அக மதிப்பீட்டு மதிப்பெண் பட்டியலை மாா்ச் 2-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க பள்ளிகளுக்கு அரசுத் தோ்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வு மாா்ச் 13-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான செய்முறைத் தோ்வுகள் மாா்ச் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளன. இந்த நிலையில், செய்முறைத் தோ்வு, மாணவா்களின் வருகைப் பதிவு, இணைச் செயல்பாடுகள் தொடா்பான அக மதிப்பீட்டு மதிப்பெண்ணை மாா்ச் 2-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அரசுத் தோ்வுகள் இயக்குநா் சேதுராம வா்மா பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அரசு தோ்வுகள் இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: பள்ளித் தலைமை ஆசிரியா்கள் அகமதிப்பீடு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை இணையதள முகவரியில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள யூஸா் ஐடி, பாஸ்வோ்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி பிப்.17 முதல் 28-ஆம் தேதி வரையிலான நாள்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இதைத் தொடா்ந்து, பிப்.23 முதல் 28-ஆம் தேதி வரையிலான நாள்களில் அக மதிப்பீட்டு மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதையடுத்து அகமதிப்பீடு மதிப்பெண் பட்டியல்களை மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா்கள் அலுவலகத்தில் மாா்ச் 2-ஆம் தேதிக்குள் தலைமை ஆசிரியா்கள் ஒப்படைக்க வேண்டும். அவற்றை மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா்கள் பெற்றுக்கொண்டு தங்கள் வசம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.