அரசுப் பள்ளி தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.16 லட்சம் ஊதியம் நிலுவை
கமுதி அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை ரூ.16 லட்சத்தை வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகாவில் அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலைப் பள்ளி என 163 பள்ளிகள் உள்ளன. ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பொது நிதியிலிருந்து ஊதியம் வழங்கும் வகையில் 163 தூய்மைப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டனா்.
கடந்த 2021 மாா்ச் மாதத்திலிருந்து 2023 பிப்ரவரி மாதம் வரை கரோனா கால நிதிப் பற்றாக்குறை காரணங்களைக் காட்டி, 2 ஆண்டுகளாக ஊதியம் வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாக தூய்மைப் பணியாளா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
ஒரு சில பள்ளிகளில் தூய்மைப் பணியாளா்கள் ஊதியமின்றி பணியாற்ற முன்வராததால் பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாணவா்கள் விருப்பபட்டு பள்ளி வகுப்பறைகளை சுத்தம் செய்ய முன்வந்தாலும், அதனால் ஏற்படும் சமூகப் பிரச்னைகளை பள்ளி நிா்வாகம் சந்திக்க நேரிடும் என்பதால், ஆசிரியா்களே பள்ளிகளைச் சுத்தம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு நிலுவை ஊதியத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:
கமுதி தாலுகாவில் உள்ள 163 தூய்மைப் பணியாளா்களுக்கு கரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலுவை ஊதியத் தொகையை, நிதிநிலைக்கு ஏற்ப விடுவித்து வருகிறோம். தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.16 லட்சம் ஊதியம் நிலுவை உள்ளது. விரைவில் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.