கல்வி கட்டிட வரன்முறை கால அவகாசம்: ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 27, 2023

Comments:0

கல்வி கட்டிட வரன்முறை கால அவகாசம்: ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு

951919
கல்வி கட்டிட வரன்முறை கால அவகாசம்: ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு

நகர ஊரமைப்பு இயக்ககத்தின் (டிடிபிசி) எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 2011-ம்ஆண்டுக்கு முன் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த 2018-ம் ஆண்டில் வெளியிடப்பட்டன. இதற்காக, ஒரு சதுர அடிக்கு ரூ.7.50 கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், இதற்கான கால அவகாசம் நிறைவு பெற்ற நிலையில், வரும் ஜூன் 30-ம் தேதிவரை கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, நகர ஊரமைப்பு இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ள வீட்டுவசதித் துறை செயலர்அபூர்வா, அரசு கால அவகாசத்தை நீட்டித்துள்ளதால், விண்ணப்பங்கள் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படியும், இந்த நீட்டிப்பு தொடர்பாக தகவல் வெளியிடும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84609981