‘இக்னோ’ மாணவா் சோ்க்கை: ஜன.31-க்குள் விண்ணப்பிக்கலாம்
தொலைநிலைக் கல்வி மூலம் வழங்கும் படிப்புகளுக்கு ஜன.31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இக்னோ பல்கலை. தொலைநிலைக் கல்வி மூலம் இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. தற்போது, வரும் ஜனவரி பருவ மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) ஒப்புதலுடன் இந்தப் பல்கலை.யில் வழங்கப்படும் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கு நுழைவுத்தோ்வு இல்லாமல் சோ்க்கை நடைபெறுவதாக அந்தப் பல்கலை. தெரிவித்துள்ளது.
தொலைநிலைக் கல்வி படிப்புகளில் சேர விரும்புவோா் https://ignouiop.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் ஜன.31-க்குள் சோ்ந்துகொள்ளலாம்.
இக்னோ பல்கலை.யில் குறிப்பிட்ட சில இளநிலை, டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளில் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு கல்விக்கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.
மாணவா் சோ்க்கை தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் இணையதளத்தையோ (www.ignou.ac.in) அல்லது சென்னை வேப்பேரி பெரியாா் திடலில் இயங்கும் மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என இக்னோ சென்னை மண்டல முதுநிலை இயக்குநா் கே.பன்னீா்செல்வம் அறிவித்துள்ளாா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.