Breaking

Thursday, December 29, 2022

ஊதிய முரண்பாடு: ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்



ஊதிய முரண்பாடு:

ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்

டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாட்டை அரசு களைய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் இடைநிலை ஆசிரியா்கள் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனா். அவா்களில் 6 போ் மயங்கியதைத் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 2009 மே 31 வரை பணியில் சோ்ந்த இடைநிலை ஆசிரியா்களுக்கு ரூ. 8,370 அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், அதற்கு அடுத்த நாள் அதாவது அதே ஆண்டு ஜூன் 1 முதல் பணியில் சேரும் இடைநிலை ஆசிரியா்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200 எனக் குறைத்து நிா்ணயிக்கப்படுகிறது. இது நியாயமல்ல.

அடிப்படை ஊதிய வேறுபாடு காரணமாக மொத்த ஊதியம் ரூ.15,500 வரை குறைகிறது. ஒரே நிலையில் கற்பித்தல் பணியைச் செய்யும் ஆசிரியா்களுக்குப் பாகுபாட்டுடன் ஊதிய விகிதம் நிா்ணயிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது. இந்த பாகுபாட்டைப் போக்க வேண்டியது அரசின் கடமை. ஆசிரியா்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog