நியமனத்தேர்வு கட்டாயம் - அரசாணை 149 ரத்து இல்லை!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 29, 2022

Comments:0

நியமனத்தேர்வு கட்டாயம் - அரசாணை 149 ரத்து இல்லை!!

நியமனத்தேர்வு கட்டாயம் - (மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்து அமைச்சர் ஆகலாம்) அரசாணை 149 ரத்து இல்லை!!

Screenshot_2022_1229_115654
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரி யம் மூலம் நடத்தப்படும் தேர்வின் மூலமே அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இதற்காக அர சாணை 149 கொண்டுவரப்பட்டது. இதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருக்கும் ஆசிரி யர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்று இருக்கும் அரசு, இந்த அரசாணையை ரத்து செய்து, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் என்றும் ஆசிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்து இருந்தனர்.

ஆனால் ஏற்கனவே உள்ள நடைமுறைப்படியே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அடுத்ததாக இடை நிலை, பட்டதாரி பணியிடங்களுக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய ஆண்டு திட்ட அட்டவணையில் அறிவிக்கப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84719334