உண்ணாவிரதம் இருக்கும் ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சு
ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி சென்னையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுடன் தமிழக அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில், 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும், இதற்கு முந்தைய மாதத்தில் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு உள்ளது.
இந்த முரண்பாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா்கள், குடும்பத்துடன், செவ்வாய்க்கிழமை முதல் தொடா் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து வரும் நிலையில், இதுவரை 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு நிலவுகிறது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களின் குழுவினருடன் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் காகர்லா உஷா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் முடித்துக் கொள்ளப்படுமா அல்லது போராட்டம் தொடருமா என்பது சற்று நேரத்தில் தெரியவரும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.