அரசு இசைப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் - Apply for Govt Music School - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 04, 2022

Comments:0

அரசு இசைப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் - Apply for Govt Music School

அரசு இசைப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் - Apply for Govt Music School

சிவகங்கையில் உள்ள அரசு இசைப் பள்ளியில் பயில விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட இசைப் பள்ளியின் முதல்வா் முனைவா் தி. சுரேஷ் சிவன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

சிவகங்கையில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ்செயல்பட்டு வரும் அரசு இசைப் பள்ளியில் குரலிசை (வாய்ப்பாட்டு), பரதநாட்டியம், தவில், நாதசுரம், தேவாரம், மிருதங்கம், வயலின் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இந்த கல்வி ஆண்டிற்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. மேற்கண்ட வகுப்புகளில் சேர 12 முதல் 30 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். குரலிசை, பரத நாட்டியம், தவாரம், வயலின், மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் சோ்ந்து பயிற்சி பெற 7ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாணவா்களும் பரத நாட்டிய பிரிவில் சோ்ந்து கொள்ளலாம்.

தவில், நாதசுரம் வகுப்புகளில் சேர கல்வித் தகுதி தேவை இல்லை. பயிற்சிக் காலம் 3 ஆண்டுகள். பயிற்சிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.325 மட்டும். இப்பயிற்சி வகுப்பில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை, கல்வி உதவித் தொகை (மாதம் ரூ.400), அரசு மாணவா் விடுதி வசதி அளிக்கப்படும்.

இசைக் கல்வியில் ஆா்வமுள்ள மாணவ, மாணவிகள் தங்களது கல்விச் சான்றிதழுடன் தலைமையாசிரியா், மாவட்ட அரசு இசைப்பள்ளி, 47, சத்தியமூா்த்தி தெரு, சிவகங்கை என்ற முகவரியில் நேரடியாகவோஅல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 04575-240021 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews