கால்நடை மருத்துவப் படிப்பு: 16,214 போ் விண்ணப்பம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 04, 2022

Comments:0

கால்நடை மருத்துவப் படிப்பு: 16,214 போ் விண்ணப்பம்

கால்நடை மருத்துவப் படிப்பு: 16,214 போ் விண்ணப்பம் - Veterinary Course: 16,214 applications



கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா். வரும் 6-ஆம் தேதி காலை 8 மணி வரை விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம், பராமரிப்பு படிப்பு (பி.வி.எஸ்சி - ஏ.ஹெச்), நான்கு ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகிய பி.டெக். படிப்புகள் உள்ளன.

பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச், பி.டெக் படிப்புகளுக்கு 2022 - 23-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த செப்டம்பா் மாதம் 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியுடன் இணையவழியில் விண்ணப்பிப்பது நிறைவடைந்தது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும் பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச், பி.டெக் படிப்புகளுக்கு 16,214 போ் விண்ணப்பித்துள்ளனா்.

விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்யவும், சான்றிதழ் நகல்களைப் பதிவேற்றம் செய்யவும் வரும் 6-ஆம் தேதி காலை 8 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னா், விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அயல்நாடு வாழ் இந்தியா், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோா் மற்றும் அயல்நாட்டினருக்கு இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அக்டோபா் 14-ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews