வேலை வழங்குவதாகக் கூறி ஜெர் ஏர்வேஸ் பெயரில் போலி நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படுவதாகவும், அதன் மூலம் பணம் சிலர் பறிப்பதாகவும் அந்நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பணியிடங்களுக்காக எந்தவொரு அறிவிப்பையும் விடவில்லை என்றும், இதனால், வேலை தேடுபவர்கள் போலி முகவர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், சில மர்ம நபர்கள் ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்களைப் போன்று ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு போலி நேர்முகத் தேர்வுகளை ஏற்பாடு செய்கிறார்கள். நேர்முகத் தேர்வில் பணி வாய்ப்புக்காக பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபடுகின்றனர்.
பணியிடங்களை நிரப்புவதற்காக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தேர்வர்களிடம் பணம் பெறுவதில்லை. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியிடங்கள் குறித்து அறிந்துகொள்ள ஜெட் கேரியர்ஸ் (JetCareers) என்ற இணையப் பக்கத்தை பின்தொடரலாம். ஜெட் ஏர்வேஸ் பணியிடங்கள் குறித்து சமூகவலைதளத்தில் அல்லது மின்னஞ்சல்களில் வரும் அறிவிப்புகளை பரிசீலனை செய்துகொள்ளுங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.