படிப்பு போட்டியால் சக மாணவியின் தாயால் விஷம் கொடுக்கப்பட்ட மாணவன் உயிரிழப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 04, 2022

Comments:0

படிப்பு போட்டியால் சக மாணவியின் தாயால் விஷம் கொடுக்கப்பட்ட மாணவன் உயிரிழப்பு

படிப்பு போட்டியால் சக மாணவியின் தாயால் விஷம் கொடுக்கப்பட்ட மாணவன் உயிரிழப்பு

காரைக்காலில் 8-ம் வகுப்பு படிக்கும் தனது மகளை விட அதிக மதிப்பெண் எடுப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத தாய் ஒருவர், சக மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஷம் கொடுக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த மாணவியின் தாய் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை சேர்ந்தவர் மாணவர் பால மணிகண்டன். இவர் காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் ஆண்டு விழா ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு பாலமணிகண்டன் நேற்றுமுன்தினம் மதியம் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் தனது தாயிடம் குளிர்பானத்தை குடித்ததில் இருந்து எனக்கு மயக்கமாக உள்ளது என மாணவர் பாலமணிகண்டன் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் பாலமணிகண்டன் திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து மாணவனின் தயார் மகனை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்தபோது மாணவன் பாலமணிகண்டன் குடித்த குளிர்பானத்தில் விஷம் கலந்து இருப்பது தெரியவந்தது.

இதற்கிடையே மாணவனிடம் குடித்த குளிர்பானத்தை அவனது தாய் கொடுத்ததாக பள்ளியின் காவலாளி கொடுத்தது தெரியவந்தது. கண்காணிப்பு கேமரா இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் தாயார் தனது கணவருனுடன் பள்ளிக்கு சென்று பள்ளி காவலாளியை விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் காவலாளியை அழைத்து விசாரணை நடத்தினர். மேலும் பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது அதே பள்ளியில் பாலமணிகண்டன் வகுப்பில் பயிலும் சக மாணவியின் தாயார் காவலாளியிடம் குளிர்பானம் கொடுக்கும் காட்சி பதிவாகியிருந்தது.

இதையடுத்து மாணவியின் தாயார் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் பாலமணிகண்டன் கல்வியில் சிறந்து விளங்குவதால் இதை பொறுக்க முடியாமல் மாணவியின் தாயார் குளிர்பானத்தில் விஷம் கலந்து அதை காவலாளி மூலம் தனது மகனுக்கு கொடுத்து கொலை செய்ய முயன்றதாக தெரிவித்தார்.

இந்நிலையில் விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த மாணவர் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மாணவியின் தாயார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் மாணவர் உயிரிழந்ததையடுத்து ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை சூறையாடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews