ரூ.1000 கருணை பென்ஷன்: பட்டியல் தயாரிக்க பதிவாளர் உத்தரவு
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்று உயிருடன் உள்ள மற்றும் தற்போது ஓய்வு பெறவுள்ள பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனைத்து மண்டல இணைபதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
நிதி ஆதாரமில்லாத கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி ஓய்வு பெற்று உயிருடன் உள்ள பணியாளர்களுக்கு மாதாந்திர கருணை ஓய்வூதிய தொகையாக ரூ.1000 வழங்க இயலாத சூழ்நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்று உயிருடன் உள்ள 8,752 பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
ஓய்வூதியம் வழங்குவதற்கு ஏதுவாக அரசாணையில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளை பரிசீலித்து தகுதி பெறாத நபர்களின் விபரங்களை நீக்கி, நிபந்தனைகளின் படி தனியார் கருணை ஓய்வூதியம் பெற தகுதியானவர் என உறுதி மொழி சான்றிதழை தொடர்புடைய சங்கங்களுக்கு அளிக்க வேண்டும்.
அதனை பரிசீலித்து உறுதிமொழி சான்றிதழை சரக துணை பதிவாளர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதனை அவர்கள் பரிசீலித்து இணை பதிவாளர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அந்த பட்டியலை சரிபார்த்து மண்டல இணைபதிவாளர்கள் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு அனுப்பி வைக்க வேண்டும். சங்க பணியில் இருந்து ராஜினாமா செய்தவர்களும், விருப்ப ஓய்வில் சென்றவர்களும் கருணை ஓய்வூதியம் பெற தகுதியற்றவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு பதிவாளர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.