B.Sc., (Life Science) முடித்த SC / ST மாணவர்களுக்கு மருத்துவத் துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு! செய்தி வெளியீடு எண் : 1464 நாள் : 25.08.2022 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 26, 2022

Comments:0

B.Sc., (Life Science) முடித்த SC / ST மாணவர்களுக்கு மருத்துவத் துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு! செய்தி வெளியீடு எண் : 1464 நாள் : 25.08.2022

B.Sc., (Life Science) முடித்த SC / ST மாணவர்களுக்கு மருத்துவத் துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு!

செய்தி வெளியீடு எண் : 1464

நாள் : 25.08.2022

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம்

B.Sc (Life Science) முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ/மாணவியருக்கு இலவசமாக தாட்கோ மூலம் Medical Coding Training பயிற்சி அளித்து பல்வேறு மருத்துவத்துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளங்கலை அறிவியல் (ite Science) முடித்த மாணவர் மற்றும் மாணவியர்களுக்கு இலவசமாக Medical Coding Training குறுகிய கால பயிற்சியாக அளித்து பல்வேறு மருத்துவத் துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்க கூடிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியிளர் மாணவர் மற்றும் மாணவியர்களாக இருக்க வேண்டும். இளங்கலை அறிவியல் (Life Science) பட்டப்படிப்பில் மொத்த மதிப்பெண்களில் 60 சதவீதம் பெற்றிருக்கவேண்டும் தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மூலம் இணையதளம் வழியாக மூன்று மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும் பயிற்சிக்கான கட்டணத் தொகை ரூ.15,000/ தாட்கோ வழங்கும். பயிற்சி முடிந்தவுடன் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டு தேர்வு பெற்ற மாணக்கர்களுக்கு i50 (nternational. Organization for Standardization) தரத்துடன் கூடிய சான்றிதழ் அளிக்கப்படும் மேலும் பயிற்சியில் தேர்ந்த மாணக்கர்களுக்கு நேர்முக தேர்வின் மூலம் நூறு சதவீதம் மருத்துவத் துறை மென்பொருள் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படும் வேலையில் சேர்ந்து 6 மாதங்களுக்கு பிறகு வீட்டிலிருந்த படியே அந்நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பணி மேற்கொள்ளலாம்.

ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ12,000/- முதல் ரூ.15,000/-வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ,50,000/- முதல் ரூ.70,000/-வரை பதவி உயர்வின் அடிப்படையில் குறுகிய காலத்தில் மாத ஊநியமாக பெறலாம். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு நாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு மேற்கொள்ளலாம்.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews