தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் கூறுவது என்ன? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 02, 2022

Comments:0

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் கூறுவது என்ன?

அரசுப் பள்ளகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை, பள்ளி மேலாண்மைக் குழு மூலம், தொகுப்பூதியத்தில், தற்காலிக அடிப்படையில் நிரப்புமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது.

இதற்கு பட்டதாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு கட்சி, அமைப்புகள் சார்பில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில், தற்காலிக ஆசிரியர் பணி நியமனங்களை நிறுத்திவைக்குமாறு பள்ளிக்கல்வித் துறை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது.

மேலும் இந்த நியமனங்கள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவு படி ஆசிரியர் நியமனம் தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வி துறை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளின் முழு விவரம்: * 01.06.2022 வரை காலியாகவுள்ள பணியிடங்களை மட்டுமே நிரப்பப்பட வேண்டும்.

* விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

* மாவட்டக் கல்வி அலுவலர் அந்த விண்ணப்பங்களை தற்காலிக நியமனம் கோரும் பள்ளித் தலைமையாசிரியருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

* தமிழக அரசின் விதிகளின் படி கல்வித் தகுதி பெற்று இருக்க வேண்டும்.

* ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தால் கல்வித் தகுதிகளுடன் டெட் தேர்ச்சி பெற்று இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம்

* இந்நியமனமானது முற்றிலும் தற்காலிகமானது

* மாறுதல் மற்ற முறையான நியமணங்களின் மூலம் காலிப்பணியிடம் பூர்த்தி செய்யப்படும் அன்றே தற்காலிக ஏற்பாட்டின் பேரில் பணியமர்த்தப்பட்டவர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்.

* பணி மற்றும் நடத்தை திருப்தி இல்லையெனில் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்படுவர்.

* 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்பிக்கலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews