Breaking

Saturday, July 02, 2022

TET தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு

அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்கள் http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதவிருக்கும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களில், திருத்தங்களை மேற்கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்படுவதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I மற்றும் தாள் II 2022ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வாயிலாக 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் 26.04.2022 வரை வழங்கப்பட்டது.

மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 க்கு 2,30,878 பேரும், தாள் IIக்கு 4,01,886 என மொத்தமாக 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை மனுக்கள் இவ்வலுவலகத்திற்கு பெறப்பட்டு வருகிறது. ஆகையால் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையினை ஏற்று ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I/IIக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் 11.07.2022 - 16.07.2022 வரை திருந்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இனிவரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படமாட்டாது.இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்கள் http://trb.tn.nic.in/என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog