இளநிலை படிப்புகளில் திருநங்கைகளுக்கு இலவச சீட் : சென்னை பல்கலைகழகம் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 23, 2022

Comments:0

இளநிலை படிப்புகளில் திருநங்கைகளுக்கு இலவச சீட் : சென்னை பல்கலைகழகம் அறிவிப்பு

இளநிலை படிப்புகளில் திருநங்கைகளுக்கு இலவச சீட் வழங்கப்படும் என சென்னை பல்கலைகழக துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார். திருநங்கைகள் மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட சில தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். உயர்கல்வி பயின்று அதன் காரணமாகவே திருநங்கைகளுக்கு சில இடங்களில் பணி பெறுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. இந்தநிலையில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு திருநங்கைகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறார். குறிப்பாக பேருந்தில் இலவச பயணம், காவல்துறையில் திருநங்கைகளுக்கு உயர் பதவி, மேலும் பல்வேறு வேலை வாய்ப்புகளில் தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. இந்நிலையில், திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூடிய வகையிலும், திருநங்கைகள் உயர் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்கு சென்னை பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் இலவச சீட் வழங்கப்படும் என துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும், அரசு நிறைவேற்றி வரும் திட்டங்கள் குறித்தும் விதி 110-ன்கீழ் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அளித்த அறிக்கை - த. நா.ச.பே. எண்:14 நாள் : 23.03.2022

இது குறித்து அவர் கூறும்போது, ”சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 131 கல்லூரிகளிலும் தலா ஒரு இடங்கள் திருநங்கைகளுக்கு ஒதுக்கப்படும். இந்த நடைமுறை வரும் கல்வி ஆண்டிலிருந்து அமலுக்கு வரும்” என தெரிவித்துள்ளார். மேலும் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பு இலவசமாக வழங்குவதற்கு தயார் என ஏற்கனவே துணைவேந்தர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews