Breaking

Wednesday, March 23, 2022

வாரிசு வேலை - அரசு பணிக்காக தந்தையை கொலை செய்த மகன்

புதுக்கோட்டை:கீரனுார் பேரூராட்சியில் பணிபுரியும் ஆசையில், தந்தைக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த 'பாசக்கார' மகனை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் பேரூராட்சி துப்புரவு பணியாளர் கருப்பையா, 60. இவர், மார்ச் 31ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். கடந்த 18ம் தேதி, கீரனுார் பேரூராட்சி அருகே கருப்பையா இறந்து கிடந்தார்.

கீரனுார் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் உடலில் விஷம் கலந்திருந்ததும், நெஞ்சில் ஏறி மிதிக்கப்பட்டதில் அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கருப்பையா இறப்பு குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில், கருப்பையாவின் மகன் பழனி, 32, அவரது நண்பர் ஆனந்தன், 48, ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர். இதில், பணியின் போது இறந்தால் வாரிசு வேலை கிடைக்கும் என்பதால், தந்தைக்கு மதுவில் குருணை மருந்தை கலந்து கொடுத்ததை பழனி ஒப்புக் கொண்டார்.

விஷம் கலந்த மதுவை குடித்தும், கருப்பையா உயிரோடு இருந்ததால், பழனி, ஆனந்தன் இருவரும் அவரது நெஞ்சில் ஏறி மிதித்து கொலை செய்தது விசாரணையில் தெரிந்தது.இருவரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog