தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடந்தது.மாவட்ட தலைவர் ராஜாக்கிளி தலைமை வகித்தார். செயலாளர் காஜாமைதீன் வரவேற்றார். கூட்டத்தில் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு குளறுபடிகள் குறித்து பேசினர்.மாநில தலைவர் அய்யாக்கண்ணு, கவுரவத் தலைவர் சந்திரசேகரன், பொருளாளர் அருணாசல நாதன், செய்தி தொடர்பாளர் அங்குச்சாமி பேசினர். கூட்டத்தில், 'முதற்கட்ட உபரி பணியிட கலந்தாய்வில் பிற பள்ளிகளுக்கு சென்ற ஆசிரியர்கள், மீண்டும் உபரி பள்ளிக்கே சென்றுள்ளது வருத்தத்திற்குரியது. இரண்டாம் கட்ட பணிமாறுதலில் முதல்நாள் காட்டப்பட்ட தேவைப்பட்டியலில் இடம் காட்டப்படவில்லை.
மூன்றாம் கட்டமாக மார்ச் 16 முதல் தொடர்ந்து இதுவரை மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் நள்ளிரவு வரை தொடர்ந்து நடக்கிறது. கலந்தாய்வில் கலந்து கொள்வோருக்கு பிறபணி (ஓ.டி.,) அளிக்க வேண்டும்கலந்தாய்வு கூட்டத்திற்கு போதிய வகுப்பறை ஒதுக்கவில்லை. குடிநீர் வசதி, கழிப்பறை வசதி செய்து தரவில்லை. மாநிலம் முழுவதும் நடக்கும் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலை விரைவில் முடிக்க வேண்டும் என கல்வித்துறையை கேட்டு கொள்வதாக தெரிவித்தனர். அமைப்புச் செயலாளர் கிருஷ்ணதாஸ் நன்றி கூறினார்.
Search This Blog
Sunday, March 20, 2022
Comments:0
கலந்தாய்வில் குளறுபடிகள் பட்டதாரி ஆசிரியர்கள் வேதனை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.