இடைநிலைக்கல்வி - அரசு நிதியுதவி பெறும் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் தற்போதைய நிலையில் ஆசிரியருடன் கூடிய உபரியாக பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் உபரி பணியிடங்களில் நியமனம் பெற்று பணிபுரியும் முதுகலை / பட்டதாரி / இடைநிலை / சிறப்பாசிரியர்கள் ஆசிரியர்கள் விவரம் கோருதல் - தொடர்பாக.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச்சட்டம் 1973 விதிகள் 1974 ன்படி பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் தற்போதைய நிலையில் ஆசிரியருடன் கூடிய உபரி பணியிடத்தில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்கள் மற்றும் உபரி பணியிடத்தில் நியமனம் பெற்று பணிபுரியும் ஆசிரியர்கள் இந்நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க கோரி சென்னை மற்றும் சென்னை உயர் நிதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட ஆசிரியர்களின் கூதல் விவரங்களை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றத்தால் அறிவுருத்தப்பட்டது.
இந்நிலையில் நிதியுதவி பெறும் பள்ளிகளில் 09.04.2019 க்கு முன் ஏற்பட்ட காலிப்பணியிடத்தில் நியமனம் பெற்று 09.04.2019 க்கு முன் ஒப்புதல் கோரி கருத்துரு அனுப்பப்பட்டவர்கள், 09.04.2019 பிறகு கருத்துரு அனுப்பப்பட்டவர்கன் மற்றும் 09.04.2019 க்கு பிறகு ஏற்பட்ட காலிப்பணியிடத்தில் நியமனம் பெற்று கருத்துரு அனுப்பட்டவர்கள், கருத்துரு அனுப்பப்படாதவர்கள் மற்றும் உபரியாக பணிபுரிந்துவரும் உபரி ஆசிரியர்கள் விவரங்களுடன் அன்னாரால் தொடரப்பட்ட வழக்குகள் குறித்த விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்ட 1 முதல் 5 வரையிலான படிவங்களில் தனித்தனியாக பூர்த்தி செய்து 29.03.2022 க்குள் இணை இயக்குநர் ( இடைநிலைக்கல்வி) மின்னஞ்சல் idssed@nic.in முகவரிக்கு Excel வடிவில் அனுப்பிவிட்டு அதன் கையொப்பமிட்ட நகல் ஆணையருக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.