Breaking

Thursday, March 24, 2022

பள்ளி துப்பரவுப் பணியாளர்களுக்க ஊதியம் வழங்கப்படாமை - விரைந்து ஊதியம் வழங்கிட ஆவண செய்தல் சார்பு.

தூய்மை இந்தியா திட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்க, - நடுநிலைப்பள்ளி, அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி - துப்பரவுப் பணியாளர் ஊராட்சி ஒன்றியம் மூலம் துப்பரவு பொருட்கள் - மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குதல் - ஜீன் 16, 2021 முதல் பள்ளிகள் செயல்படுதல் - இதுகாரும் துப்பரவுப் பணியாளர்களுக்க ஊதியம் வழங்கப்படாமை - விரைந்து ஊதியம் வழங்கிட ஆவண செய்தல் சார்பு.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளி, அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் துப்பரவுப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி ஒன்றியத்தின் மூலம், துப்பரவு பொருட்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. 2021-22ம் கல்வியாண்டில், ஜீன் 16, 2021 முதல் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் துப்பரவு பணியாளர்கள் பள்ளி வேலை நாட்களில் தொடர்ந்து பள்ளிக்கு வந்து, துப்பரவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு ஜூன் 2021 முதல் டிசம்பர் 2021 வரை ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. இவர்கள் குறைந்த ஊதியத்திற்கு அதாவது நாள் ஒன்றிற்கு ரூ.75க்கும் குறைவாக ஊதியம் பெறுபவர்கள். அந்த ஊதியமும் பல மாதங்களாாக வழங்கப்படாமல் இருப்பதால் மிகுந்த வேதனையில் உள்ளனர். இந்த விஷயத்தில் தாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, விரைந்து ஊதியம் வழங்கிட வேண்டுமாய் துப்பரவாளர்கள் சார்பாக பணிந்து வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog