தில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரம் 'மிகவும் மோசம்' பிரிவில் தொடா்ந்து நீடித்து வருகிறது. இதையடுத்து தில்லி அரசு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காற்றின் தரம் மோசமானதால் வெளியில் வருவோருக்கு சுவாசப் பிரச்னைகள் உள்ளிட்ட உடல்நலக்கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், காற்று மாசு அதிகரித்துள்ளதால் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி, கல்லூரி வகுப்புகள் நேரடியாக நடைபெறாது என்றும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் தொடரும் என்று தில்லி கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, காற்று மாசு காரணமாக பள்ளிகள் மட்டும் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக கடந்த 13 ஆம் தேதி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்தார். இதையடுத்து தற்போது நிலைமை மாற்றம் அடையாததால் உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல காற்று மாசு காரணமாக ஹரியாணா மாநிலத்திலும் குருகிராம், பரிதாபாத், சோனிபட், ஜிஜார் உள்ளிட்ட நகரங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.