பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கு, மாணவர்களின் மொபைல் போன், முகவரி உள்ளிட்ட, 12 விபரங்களை சேகரித்து, வரும், 4ம் தேதிக்குள் தாக்கல் செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பொது தேர்வுக்காக, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களின் விபரங்களை தாக்கல் செய்யுமாறு, பள்ளிகளுக்கு தேர்வு துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பாலினம், ஜாதி, மதம் மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர், மாற்றுத் திறனாளி வகை, மொபைல் போன் எண், பாட தொகுப்பு, பயிற்று மொழி, மாணவர்களின் வீட்டு முகவரி என, 12 விபரங்களை சேகரிக்க வேண்டும்.இந்த விபரங்களை, நாளை முதல் டிசம்பர் 4ம் தேதிக்குள், 'எமிஸ் டிஜிட்டல்' தளத்தில், பள்ளிகள் தரப்பில் பதிவு செய்ய வேண்டும். தமிழில் எழுதும் போது, பெயருக்கு முன் இருக்கும், 'இனிஷியல்' என்ற தலைப்பெழுத்து, தமிழிலேயே இருக்க வேண்டும்.பத்தாம் வகுப்புக்கு, 2022 மார்ச் 1ல், 14 வயது நிறைவடையாத வர்களாக இருந்தால், வயது தளர்வு சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 1க்கு, 2022 மார்ச் 1ல், 15 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.மாணவர்களின் பெற்றோர் வழங்கும் மொபைல் போன் எண்ணில், பொதுத்தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
எனவே, சரியான எண்ணை பதிவேற்ற வேண்டும். இந்த விபரங்களை பதிவு செய்வதில் தவறுகள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் அல்லது பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.