கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்தவர்களுக்கும் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கும் அரசு பணிகளில் முன்னுரிமை - அரசாணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 13, 2021

Comments:0

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்தவர்களுக்கும் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கும் அரசு பணிகளில் முன்னுரிமை - அரசாணை வெளியீடு

தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்வழியில் பயின்ற வர்களுக்கும், அரசுப் பள்ளிகளில் பயின்றவர் களுக்கும், அரசுப் பத விகளுக்கான வேலை வாய்ப்பில் முன்னிரிமை கொடுக்கப்படுவதை இந்த அரசு உறுதி செய் யும் என கடந்த ஜூன்6ம் தேதி ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கொரோனா தொற்றால் பெற்றோர் ருவரையும் இழந்த இளைஞர்கள், முதல்த லைமுறை பட்டதாரிகள் மற்றும் அரசுப் பள்ளிக ளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு அர சுப்பணியிடங்களில்முன் னுரிமை வழங்கப்படும் என்று கடந்த செப்.3ம் தேதி நடைபெற்ற மனித வள மேலாண்மைத்துறை யின் மானியக் கோரிக்கை தொடர்பான உரையின் போது நிதி, மனித வள மேலாண்மை அமைச்சர் தெரிவித்தார். அதன்படி வேலைவாய்ப்பகங்கள் மூலம் மேற்கொள்ளப் படும் அரசுப் பணி நியமனங்களில் பின்பற் றப்பட்டு வரும் முன் னுரிமை முறையினை மறுசீரமைப்பு செய்யும் வகையில் ஆணையிடப்ப டுகிறது. அரசுப் பணியிடங் களுக்கு மேற்கொள் ளப்படும் பணியாளர் தெரிவுகளில், வேலை வாய்ப்பு அலுவலகங்க ளில் இருந்து பதிவுதா ரர்களின் பட்டியலை பெறுவதுடன் தினசரி நாளிதழ்களில் விளம்ப ரம் வெளியிட்டு விண் ணப்பங்களைப்பெற்றும் மேற்கொள்ளப்படும் நடைமுறையில் இடஒ துக்கீடு விதிகளுக்குட் பட்டுஇந்த முன்னுரிமை அளிக்கப்படும் முறை, பின்பற்றப்பட வேண்டும். அத்தகைய பணியா ளர்தெரிவுகளில், முன்னு ரிமை பெற்றோர் மற்றும் முன்னுரிமையற்றோருக்கு இடையே 1: 4 என்கிற விகி தாச்சாரம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும். முன்னுரிமை சுழற்சிகளின்படி மேற் கொள்ளப்பட்ட நேரடி நியமனங்கள் குறித்த விவ ரங்கள் அடங்கிய பதிவேடு தொடர்புடைய நியமன அலுவலர்களால் பராமரிக் கப்பட வேண்டும்.

முன்னுரிமை பிரிவு ஒவ்வொன்றினையும், அவற்றின் வரிசை எண் களை அடிப்படையாக கொண்ட சுழற்சி முறை யினை பின்பற்றி முன் னுரிமைக்குரிய பணியி டத்திற்கு பரிசீலிக்கப்பட வேண்டும். முன்னுரிமை சுழற்சி பதிவேட்டின் அடிப்படையில் ஒரு தெரிவில் எந்த முன்னு ரிமை வரிசை எண்ணில் பணி நியமனம் முடிவ டைகிறதோ. அதற்கு அடுத்த முன்னுரிமை வரிசை எண்ணிலிருந்து அடுத்த தெரிவில் முன் னுரிமை தொடங்கப்பட வேண்டும். மேற்காணும் ஆணைகளை பின்பற்றி முன்னுரிமை பெற்றோர் மற்றும் முன்னுரிமையற் றோருக்கான பணியிடங் களுக்குநியமனங்கள் மேற் கொள்ளும்போது, இன சுழற்சி விதிகள் தவறாமல் பின்பற்றப்படவேண்டும். மேலும் வேலைவாய்ப்ப கங்களிலிருந்து பட்டி யலைபெறுவதுடன், தின சரி விண்ணப்பம் பெற்று மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களுக்கு மட்டுமே இவ்வாணை பொருந்தும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews