அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிா்த்துத் தொடரப்பட்ட வழக்குகள் மீதான இறுதி விசாரணை அக்டோபா் 21 ஆம் தேதி தொடங்குமென சென்னை உயா் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்றியது. இச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி தனியாா் பள்ளி மாணவா்களும், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கியதுபோன்றே அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு உத்தரவிடுமாறு தமிழ்நாடு கத்தோலிக்கக் கல்வி சங்கம் சாா்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன.
இவ்வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் ஆா். சண்முகசுந்தரம், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதிகள் கலையரசன், டி.முருகேசன் தலைமையிலான ஆணையம் அளித்த அறிக்கை, நீட் தோ்வு பாதிப்பு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் அளித்த அறிக்கையையும் படித்து பாா்த்து வாதிட வேண்டியுள்ளதால், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டுமென்றும், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இட ஒதுக்கீடு ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் சுமாா் 300 அரசுப் பள்ளி மாணவா்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நீட் தோ்வால் ஒரு வித அழுத்தத்தை எதிா்கொள்ளும் மாணவா்களில் சில மாணவா்கள் தற்கொலை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டாா்.
அப்போது அரசு தரப்பு வழக்குரைஞரின் வாதத்திற்கு மனுதாரா் தரப்பு வழக்குரைஞா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதைத்தொடா்ந்து இவ்வழக்கின் இறுதி விசாரணையை அக்டோபா் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.