டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு ஆதார் கட்டாயமா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பதாரர்களிடம் ஆதார் எண் கேட்பதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களிடம் ஆதார் எண் கேட்பதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜானகி என்பவர் மனு தொடர்ந்துள்ளார். டி.என்.பி.எஸ்.சி. ஆதார் எண் கேட்பதற்கு தடை விதிக்குமாறு பொதுநல மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 மற்றும் குரூப் -2 உள்ளிட்ட போட்டி தேர்வு எழுதுவோர் ஒரு முறை மற்றும் நிரந்தர பதிவில் ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே தேர்வு எழுத நுழைவுச்சீட்டு பெற முடியும் என தேர்வுத்துறை அறிவித்திருந்தது.
மேலும் குரூப் 1 தேர்வு மற்றும் உதவி இயக்குனர் தேர்வு உள்ளிட்டவற்றுக்கு தேர்வு கூட நுழைவுச்சீட்டு பெற ஆதார் எண் அவசியம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம் என்ற அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக உரிய விளக்கம் தர தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் அரசு குற்றவியல் வழக்கறிஞர் பணியிடத்திற்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இந்த அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது
இந்த மனுவில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, தேர்வு எழுத, ஆதார் எண் கட்டாயமில்லை என்று தீர்ப்பு குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி முரளி சங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இது குறித்து உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.