ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சிபெற வேண்டும். இவை ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு, ஜேஇஇ பிரதானத் தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும். இதில் முதல்நிலைத் தேர்வானது தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பாண்டுக்கான முதல் மற்றும் 2-ம் கட்டத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன் பின் ஏப்ரலில் நடைபெறவிருந்த 3-ம் கட்டத் தேர்வு கரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டு, கடந்த ஜூலை 20 முதல் 27-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை நாடுமுழுவதும் 915 மையங்களில் சுமார் 7 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
இந்நிலையில், பிஇ, பிடெக் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் jeemain.nta.nic.in என்றஇணையதளத்தில் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டன. இதில் 17 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மட்டும் தலா 4 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் மாணவர் எஸ்.சங்கர்பாலாஜி அதிகபட்சமாக 99.99 மதிப்பெண் எடுத்துள்ளார். மேலும், பி.ஆர்க்., பி.பிளானிங் படிப்புக்கான ஜேஇஇ தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
தொடர்ந்து 4-ம் கட்டத் தேர்வுகள் ஆகஸ்ட் 26, 27, 31மற்றும் செப்டம்பர் 1, 2-ம் தேதிகளில் நடைபெற உள்ளன. கட்ஆஃப்உட்பட இதர விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.