வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் கவனத்திற்கு – மல்டி டிவைஸ் சிஸ்டம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 12, 2021

Comments:0

வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் கவனத்திற்கு – மல்டி டிவைஸ் சிஸ்டம்!

வாட்ஸ் அப் நிறுவனம் தனது டெஸ்க்டாப் மற்றும் பீட்டா பயனர்களுக்கான பல சாதன அமைப்புகளை (Multi-Device Support) சோதனை செய்து வருவதாகவும், இந்த மல்டி டிவைஸ் அம்சத்தை கூடிய விரைவில் அறிமுகப்படுத்தும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மல்டி டிவைஸ் சிஸ்டம்

அதாவது வாட்ஸ்அப் செயலியின் பயனர்கள் ஒரே நேரத்தில் பலவிதமான சாதனங்கள் மூலம் தங்களது வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மல்டி டிவைஸ் சிஸ்டத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சமானது தற்போது சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், இவை கூடிய விரைவில் வாட்ஸ் அப் பயனர்களின் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு வாட்ஸ்அப் வாடிக்கையாளர் டேப்லெட், டெஸ்க்டாப், மொபைல், லேப்டாப் உள்ளிட்ட நான்கு வகையிலான சாதனங்களில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியும். இந்த அம்சத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் வாட்ஸ் அப் செயலியை உபயோகப்படுத்தும் மொபைல் போன்ற மெயின் டிவைஸில் இணைய இணைப்பு இல்லாமலேயே கூடுதலாக இணைக்கப்பட்ட சாதனங்களில் வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்த முடியும். இது தவிர உங்கள் தொலைபேசியுடன் இணைப்பு இல்லாத பட்சத்தில் பயனர்களால் வாட்ஸ் அப் மூலம் செய்திகளை அனுப்பவும், பேசவும் முடியும்.

வாட்ஸ்அப் பீட்டா பயனர்கள் இந்த மல்டி டிவைஸ் திட்டத்தில் சேர்ந்த பிறகு, டெஸ்க்டாப் பீட்டாவிற்கான வாட்ஸ் அப்பின் புதிய, பிரத்யேக பதிப்பை பயன்படுத்த முடியும். அதாவது QR குறியீட்டைப் பயன்படுத்தி பயனர்கள் வாட்ஸ்அப் வெப் அல்லது டெஸ்க்டாப்பில் உள் நுழைய வேண்டும். இந்த அம்சம் முதன் முதலாக வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகள் செயல்பாடும் அறிமுகம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews