உங்களது PF கணக்கில் பேலன்ஸ் தொகை எவ்வளவு உள்ளது? தெரிந்து கொள்ள எளிய வழிமுறை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 12, 2021

Comments:0

உங்களது PF கணக்கில் பேலன்ஸ் தொகை எவ்வளவு உள்ளது? தெரிந்து கொள்ள எளிய வழிமுறை!

அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வழங்கப்படும் வருங்கால வைப்பு நிதி PF கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் தொகை உள்ளது என்பதை வீட்டில் இருந்தே எளிமையான முறையில் பார்க்கலாம்.

PF தொகை:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலமாக அனைத்து அரசு மற்றும் சில அமைப்பு சார்ந்த தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும் வகையில் அவர்களது மாத சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு சேமிக்கப்படும். பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் வருமான வரியின் பிரிவு 80 சி இன் கீழ் தங்கள் சம்பளத்தில் 12% வரிகளை சேமிக்க முடியும். இபிஎப்ஓ சட்டத்தின் படி 12 சதவீதம் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதில் 8.33% ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்திற்கும் செல்கிறது. 10 ஆண்டுகள் ஊழியர் கணக்கில் தொடர்ச்சியாக இத்தொகை செலுத்தப்பட்டு வந்தால் அவருக்கு குறிப்பிட்ட தொகை ஓய்வூதியதமாக கிடைக்கும். இந்நிலையில் உங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என்பதை வீட்டிலிருந்தே பார்க்கலாம். அதற்கான எளிய வழிமுறைகள் இதோ,

https://www.epfindia.gov.in என்ற இணையதள பக்கத்தை Open செய்து EPF Balance என்ற ஆப்ஷன் உள்ளே செல்ல வேண்டும்.

பின்னர் இந்த புதிய பக்கத்திற்கு https://www.epfoservices.in/epfo சென்று பிறகு உறுப்பினர் இருப்பு தகவல் (Member Balance Information) பகுதிக்கு செல்ல வேண்டும்.

அதன்பின் உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, ஈபிஎஃப் அலுவலகம், ஸ்தாபனக் குறியீடு, பிஎஃப் கணக்கு எண் மற்றும் பிற விவரங்களை உள்ளிட வேண்டும். கடைசியாக Submit என்ற Option யை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் உங்களது PF கணக்கில் உள்ள தொகை காண்பிக்கும்.

இதுதவிர மற்றொரு வழி உண்டு. அதன்படி எஸ்.எம்.எஸ் அல்லது மிஸ்டு கால் சேவை மூலம் யுஏஎன் எண் இருந்தால் ஈபிஎஃப்ஒ உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் நிலுவை தொகையை தெரிந்து கொள்ள முடியும்.

எஸ்.எம்.எஸ் வழியாக பி.எஃப் இருப்பை நீங்கள் சரிபார்க்க, உறுப்பினர் / சந்தாதாரர் பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து 77382 99899 க்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.

அதாவது எஸ்எம்எஸ் வடிவம் மூலம் ‘EPFOHO UAN’ என்று அனுப்பினால் உங்கள் பி.எஃப் இருப்புடன் எஸ்.எம்.எஸ்-க்கு ஈ.பி.எஃப்.ஓ பதில் தெரிவிக்கும்.

அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 011-22901406 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்கள் ஈபிஎஃப் இருப்பு நிலையை தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews