தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக திண்டுக்கல் ஐ லியோனி இன்று பொறுப்பேற்றுள்ளார். இவர் சிறந்த ஆசிரியர், மேடைப் பேச்சாளர் மற்றும் இலக்கியச் சொற்பொழிவாளர் ஆக திகழ்ந்து வருகிறார்.
பாடநூல் கழகம்:
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பாடப் புத்தகங்களை தயாரித்து வழங்கி வருகிறது. இக்கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், மற்ற பள்ளிகளுக்கு குறிப்பிட்ட அளவு தொகையை நிர்ணயித்தும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 1 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வகுப்புகளுக்கும் பாட நூல்களை அச்சிட்டு வழங்கி வருகிறது. ஒவ்வொரு வகுப்புகளுக்கும் ஏற்றவாறு பாடத்திட்டங்களை தயாரித்து வழங்கும் பணியை இக்கழகம் மேற்கொள்கிறது. ஒவ்வொரு வகுப்பு மற்றும் பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப கல்வியாளர்கள் நியமிக்கப்பட்டு பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக திண்டுக்கல் ஐ லியோனி பொறுப்பேற்றுள்ளார். இந்த நிறுவனத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை, முதல்வர் முக ஸ்டாலின் நியமனம் செய்து ஆணையிட்டுள்ளார். ஐ.லியோனி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் ஒரு சிறந்த சிறந்த ஆசிரியர், மேடைப் பேச்சாளர் மற்றும் இலக்கியச் சொற்பொழிவாளர்.
இவர் சிறந்த நகைச்சுவை பட்டிமன்ற நடுவர் ஆவார். இவருக்கு 2010 ஆம் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது. இவர் திமுகவை சேர்ந்தவர். மேலும் அக்கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளராக பணியாற்றுகிறார். அதனை தொடர்ந்து தற்போது ஐ.லியோனி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.